திருச்சி சிறையில் மாரடைப்பால் கைதி மரணம் - சக கைதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள ஒரு கைதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் ஆவேசம் அடைந்த சக கைதிகள் உண்ணாவிரம் மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் சக்திநகரைச் சேர்ந்தவர் விஜி (30). இவர் 2005 ம் ஆண்டு அரியமங்கலம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றவர்.
இந்த நிலையில் அவருக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது சிறை வளாகத்துக்குள் இருக்கும் மருத்துவமனையில் டாக்டர் இல்லை. இதனால் விஜியை, திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவ மனை செல்லும் வழியிலேயே விஜி பரிதாபமாக இறந்தார்.
இதைக் கேள்விப்பட்ட திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகள் ஆவேசம் அடைந்து இன்று 400க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications