முல்லை பெரியாறு: வக்கீலுக்காக மட்டும் ரூ.22.33 கோடி தமிழக அரசு செலவு
சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்திற்காக, வக்கீல் சம்பளமாக மட்டும் தமிழக அரசு இதுவரை ரூ.22.33 கோடி செலவழித்துள்ளது.
மற்றபடி செலவினங்கள் அனைத்தும் சேர்த்து இதுவரை மொத்தம் ரூ.48.82 கோடியை தமிழக அரசு செலவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்காக கேரள போலீசாருக்கான சம்பளத்தை கேரள அரசுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.
மேலும் அணைக்கான குத்தகைப் பணமும் முறைப்பட செலுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றிய புள்ளி விவரங்கள், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டது.
இதன்படி, தமிழக அரசின் பொதுப்பணித் துறைச் செயலாளர் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
முல்லைப் பெரியாறு அணைக்காக தமிழக அரசு இதுவரை ரூ.48.82 கோடி செலவிட்டுள்ளது. இதில் 1990 முதல் 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வழக்கு தொடர்பான வக்கீல் கட்டணமாக மட்டும் ரூ.22.33 கோடி செலவாகியுள்ளது.
1979-2007 காலகட்டத்தில் அணையை பலப்படுத்துவதற்காக ரூ.18.02 கோடி செலவானது.
அணை பாதுகாப்புக்காக இதுவரை கேரள போலீசாருக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் வழங்கியுள்ளது. குத்தகைப் பணமாக 2007ம் ஆண்டு வரை ரூ.72.18 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அணை பாதுகாப்புக்காக கடந்த 1979ல் கேரள போலீசுக்கு அளித்த தொகை ரூ.22 ஆயிரத்து 951ஆக இருந்தது. இந்த தொகை 2005ம் ஆண்டில் 22.51 லட்சமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
--
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications