பெரம்பலூர் சாலை விபத்தில் விபரீதம் - கார் எரிந்து 2 பேர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் டாடா சுமோ கார் தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் கோபால் (65), மனைவி கலைச்செல்வி (60), உறவினர் ஏழுமலை(62), பேரன் சத்திய நாரயணன் (8) ஆகியோர் திருவண்ணாமலைக்கு டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்தனர். சுமோவை டிரைவர் மணிகண்டன் ஓட்டிச்சென்றார்.
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே உள்ள பெரிய ஏரிக்கரை என்னும் இடத்தில் சென்று கொண்டு இருந்த போது, சுமோ கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. மறுநிமிடமே சுமோவும் தீப்பிடித்தது.
இதில் கோபால் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
பேரன் சத்திய நாரயணன், டிரைவர் மணிகண்டன், ஏழுமலை ஆகிய மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications