அமெரிக்காவின் வட கிழக்கில் கடும் பனிப் புயல் - மக்கள் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க் அமெரிக்காவின் வட கிழக்கில் கடும் பனிப் புயல் வீசியது. இதனால் நியூயார்க் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தற்போது கடும் பனிக்காலமாகும். இந்த நிலையில் அங்கு வீசிய கடும் புனிப் புயலால், நியூயார்க் உள்ளிட்ட நாட்டின் வட கிழக்குப் பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தன.

வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், போக்குவரத்து ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. நியூயார்க் நகரில் 2 அடி அளவுக்கு பனி குவிந்திருந்தது.

இதன் காரணமாக வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், போக்குவரத்து ஆகியவை மூடப்பட்டன.

புறநகர் ரயில்கள், பஸ்கள் இல்லாததால் நியூயார்க் நகர மக்கள் அவதிப்பட்டனர். 20 இன்ச் அளவுக்கு பினி விழுந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு நியூயார்க் நகரை கடும் பனிப் புயல் தாக்கியபோது 26.9 இன்ச் அளவுக்கு பனி கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் தற்போதைய பனிப்பு புயலால் இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 39 இன்ச் அளவுக்கு பனி கொட்டியுள்ளது.

விழுந்து கிடக்கும் பனிக் கட்டிகளை அகற்ற முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். சமீப ஆண்டுகளில் இதுதான் மிகவும் மோசமான பனிக்காலம் என மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் வட கிழக்கில் உள்ள லட்சக்கணக்கான வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் மின் விநியோகம் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. 7 லட்சம் பேர் மின் விநியோகம் இல்லாததால் தடுமாறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+