இந்தியர்கள் கொலை-ஆப்கானி்ஸ்தான் செல்கிறார் மேனன்

இந்தியர்கள் தங்கியிருந்த இரு ஹோட்டல்களில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இத் தாக்குதலில் 6 பேர் பலியாயினர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். இந்த ஹோட்டலில் இருந்த இந்தியர்கள் அனைவருமே ஆப்கானிஸ்தானில் வளர்ச்சித் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் ஆவர்.
இந்தக் கொலைகளின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் கைவரிசை இருக்கலாம் என்று இந்திய உளவுப் பிரிவுகள் சந்தேகிக்கின்றன.
இந் நிலையில் வரும் 5ம் தேதி அங்கு செல்லும் மேனன் அதிபர் கர்சாய் தவிர அந் நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகிறார்.
இதற்கிடையே இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை, பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஒரு குழு காபூல் புறப்பட்டுச் சென்றுள்ளது.
மும்பை நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே இந்தத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளதாக இந்தியா கருதுகிறது.
பாக்-5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இந் நிலையில் பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications