அண்ணாமலை பல்கலை: வட இந்திய மாணவர்கள் வன்முறை- போலீஸ் தடியடியில் ஒருவர் பலி

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஜார்க்கண்ட் மாணவர் சாலை விபத்தில் பலியானதையடுத்து வட இந்திய மாணவர்கள் 500 பேர் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

அவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியதில் ஒரு மாணவர் பாலத்தில் இருந்து விழுந்து பலியானார்.

சிதம்பரம் அண்ணமாலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் படித்து வந்த ஜார்கண்டை சேர்ந்த கௌதம் குமார் சாலை விபத்தில் காயமடைந்து அண்ணாமலை மருத்துக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது நிலைமை மோசமானதால் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 12 மணிக்கு பலியானார்.

இதயடுத்து அவருடன் படிக்கும் சக மாணவர்கள் 500 பேர், குறிப்பாக வட இந்திய மாணவர்கள், சரியான சிகிச்சை அளிக்காததால் தான் கௌதம் பலியானதாகக் கூறி, அண்ணாமலை மருத்துவக் கல்லூரிக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த மேஜை, கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். தகவலறிந்த போலீசார் விராந்து வந்து மாணவர்களை விரட்டியடித்தனர்.

அப்போது தப்பியோடிய மாணவர்களில் பிகாரை சேர்ந்த சுனித் குமார் என்பவர் பாலமான் ஓடையில் தவறி விழுந்து பலியானார்.

இதையடுத்து அந்த மாணவர்கள் மேலும் அதிக வன்முறையி்ல ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இந்த சம்பவங்களையடுத்து பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதி மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அங்கு பெரும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+