புதிய சட்டசபை கட்டுமானப் பணிகள் - கருணாநிதிக்கு சோனியா பாராட்டு
சென்னை: புதிய சட்டசபை வளாக கட்டுமானப் பணிகளில் முதல்வர் கருணாநிதி காட்டி வரும் ஆழ்ந்த ஈடுபாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டசபை வளாகம் வருகிற 13ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதையொட்டி உருவாகும் விழா மலருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து செய்தி கொடுத்துள்ளார்.
அதில், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான புதிய கட்டிடம் திட்டமிட்டபடி உரிய நாளில் திறந்து வைக்கப்படுவதற்குத் தயாராகியுள்ளது என்பதனை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தங்களின் ஆழ்ந்த ஈடுபாடு காரணமாகவும், இக்கட்டடத்தின் கட்டுமானப் பணிகளின் ஒவ்வொரு நிலையிலும் தாங்கள் அடிக்கடி சென்று பார்வையிட்டு வழங்கிய ஆலோசனைகளின் பயனாகவும் இந்தக் கட்டடம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
தங்களுக்கு எனது பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும் உரித்தாகுக என்று தெரிவித்துள்ளார் சோனியா.












Click it and Unblock the Notifications