ஜெ. புகார்: 2 அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்-சபாநாயகர்
சென்னை: திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக கோரிக்கை விடுத்ததையடுத்து இந்த இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்களான கோவில்பட்டி ராதாகிருஷ்ணனும், ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் ஆகியோர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அதிமுக கோரிக்கை விடுத்தது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் புகார் கடிதத்தை சபாநாயகரிடம் கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் அளித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 2 அதிமுக எம்எல்ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன் கூறினார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதத்திற்குள் தாக்கல செய்யப்பட வேண்டும். புதிய சட்டசபை கட்டிடம் திறக்கப்பட்டதும் அங்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன என்றார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் மீது கட்சிதாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களிடம் மனு கொடுக்கப்பட்டிருந்ததே அதன் மீது நடவடிக்கை உண்டா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஆமாம். மனு கொடுத்துள்ளனர். அந்த 2 எம்எல்ஏக்களிடமும் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என்றார்.
முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து
தொகுதி மேம்பாடு தொடர்பாக மனு அளித்த இந்த இரு எம்எல்ஏக்களின் கட்சிப் பதவிகளை ஜெயலலிதா பறித்தார். ஆனால், கட்சியை விட்டு நீக்கவில்லை.
இந் நிலையில் இந்த இருவரும் திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications