ஹைதராபாத்தில் 4ம் தேதி தெலுங்கானா கமிட்டி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: மத்திய அரசு அமைத்துள்ள தெலுங்கானா ஆய்வுக் கமிட்டி வருகிற 4ம் தேதி ஹைதராபாத்தில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.
தனி தெலுங்கானா அமைக்கலாமா, தற்போதைய ஆந்திர மாநிலமே தொடரலாமா என்ற பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு ஐந்து பேரைக் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது.
இந்தக் கமிட்டி வருகிற 4ம் தேதி ஹைதராபாத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.
கமிட்டியில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒருவரான துகால், கடந்த மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் ஹைதராபாத் சென்று, ஆலோசனை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
இதையடுத்து, இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ள ஐந்து பேரும், வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் ஹைதராபாத்தில் ஆய்வு நடத்துகின்றனர்.
மூன்று இடங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.












Click it and Unblock the Notifications