வெளியுறவு இணை அமைச்சராக இருக்க லாயக்கற்றவர் சசி தரூர்- சாமி விளாசல்

அமைச்சராக சிறப்பாக செயல்படுவதை விட ட்விட்டர் மூலம் செய்திகள் அனுப்புவதிலும், வாயில் வந்ததைதப் பேசி வம்பில் சிக்குவதுமே பெரும் சாதனையாக மாறியுள்ளது தரூரின் செயல்பாடுகள்.
செளதி அரேபியாவுக்கு பிரதமருடன் சென்றுள்ள அவர் இந்தியா - பாகிஸ்தான் இடையே செளதி அரேபியா மத்தியஸ்தம் செய்யும் என்று கூறி பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். பின்னர் நான் அப்படிச் சொல்லவில்லை என்று குழப்பமான விளக்கத்தைக் கொடுத்தார்.
இந்த நிலையில், தரூரை கடுமையாக சாடியுள்ளார் சாமி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசி தரூர் வெளியுறவு இலாகாவில் எந்தப் பொறுப்பையும் வகிக்க லாயக்கில்லாதவர்.
சாதாரண ஒரு தூதர் செயல்படும் அளவுக்குக் கூட சசி தரூரின் செயல்பாடுகள், பேச்சுகள், சாமர்த்தியம், புத்திசாலித்தனம் இல்லை.
மிக மிக முக்கியமான வெளியுறவுத்துறையின் பொறுப்பை வகிப்போருக்கு என்ன தகுதி இருக்க வேண்டுமோ அது சுத்தமாக தரூரிடம் இல்லை என்று விளாசியுள்ளார் சாமி.












Click it and Unblock the Notifications