நாளை கலைஞர் வீட்டு வசதித் திட்ட தொடக்க விழா-ஜெ. பங்கேற்பாரா?

இந்த விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அதை ஏற்று ஜெயலலிதா நாளை விழாவுக்குப் போவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்க கலைஞர் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி 21 லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படுகிறது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா திருச்சியில் நாளை நடக்கிறது. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இதற்காக பிரமாண்ட விழா மேடை, 50 ஆயிரம் பேர் விழாவை கண்டுகளிக்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. மேடை, ஆலமரத்தடி வடிவில் திறந்த வெளி மேடையாக கலைநயத்துடன் வடிவமைக் கப்பட்டுள்ளது.
நாளை மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. விழாவுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மை செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி வரவேற்கிறார்.
அமைச்சர்கள் கே.என். நேரு, என்.செல்வராஜ், மத்திய மந்திரி நெப்போலியன் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதி கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அப்போது விழா மேடையில் இரு புறமும் அமைக்கப்பட்டுள்ள குடிசை வீடுகள், கான்கிரீட் வீடுகளாக மாறும் இதற்காக சுழற்மேடை உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் விழாவில் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார்.
நிகழ்ச்சியில், பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம், சிபிஎம்மின் பாலபாரதி, சிபிஐயின் சிவபுண்ணியம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் அப்துல் பாசித் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
விழாவில் பங்கேற்க நாளை மதியம் முதல்வர் கருணாநிதி விமானம் மூலம் திருச்சி வருகிறார். ஸ்டாலின் இன்றே வருகிறார்.
இந்த விழாவில் ஜெயலலிதா பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம் அவருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியிருப்பதால்.
தேசிய அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் அரசியல் தலைவர்கள் ஒரே மேடையில் சந்தித்துக் கொள்வது, பேசிக் கொள்வது என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் தமிழகத்தில் இது மிகப் பெரிய அரிதான விஷயமாகவே உள்ளது.
இதுவரை கருணாநிதியும், ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில்லை, பேசிக் கொண்டதில்லை. அப்படி ஒரு கலாச்சாரம்தான் இங்கு நிலவுகிறது.
இருப்பினும் அவ்வப்போது சில அபூர்வ சந்திப்புகள் நிகழ்வதுண்டு. கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, அந்த பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினும், அன்பழகனும் அதில் கலந்து கொண்டனர். இருப்பினும் பின் சீட்டை ஒதுக்கி அவர்களை ஜெயலலிதா அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர் 2004ம் ஆண்டு தமிழகத்தை சுனாமி தாக்கியபோது திமுக சார்பில் திரட்டப்பட்ட நிதியை ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கோட்டையில் வழங்கினார் ஸ்டாலின்.
இந்த நிலையில் அரசு விழாவில் கலந்து கொள்ள ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஸ்டாலின். இதுகுறித்து அவர் கூறுகையில், ஜெயலலிதா முதல் ஜெகன் மூர்த்தி வரை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். தனித்தனியாக அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். எதிர்க்கட்சியினரையும் மதிக்கும் போக்கை நாங்கள் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது தமிழக அரசு விடுத்த அழைப்பை ஏற்று ஸ்டாலினும், அன்பழகனும் போய்க் கலந்து கொண்டது போல இப்போது ஸ்டாலின் விடுத்துள்ள அழைப்பை ஏற்று ஜெயலலிதா வருவாரா, குறைந்தபட்சம் அதிமுக சார்பில் யாரையாவது அனுப்பி வைப்பாரா என்பது நாளை தெரியும்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications