பங்காரு அடிகளார் பிறந்த நாள்-ரூ.1 கோடி நலத்திட்டங்கள்
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் தனது பிறநத நாளையொட்டி ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடல் ஊனமுற்றோர் 20 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்,14 பேருக்கு காது கேட்கும் கருவிகள், கண்பார்வை பாதிக்கப்பட்ட 100 பேருக்கு தொழில் நடத்த மூலதனப் பொருள்கள், 20 பெண்களுக்கு மாவரைக்கும் இயந்திரங்கள், 51 பேருக்கு தையல் இயந்திரங்கள், 7 பேருக்கு துரித உணவகங்கள் அமைக்க நிதியுதவி, 7 பேருக்கு டீ மற்றும் காபி உணவகங்கள் அமைக்க நிதியுதவி,
ஆயிரம் திருக்குறள் நூல்கள் ,300 பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள், மருத்துவ நிதி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்.
பள்ளி ஆசிரியராக இருந்த அடிகளார் ஆதிபராசக்தி மீதான பக்தியினாலும் ஆன்மிகப் பணிகளாலும் பங்காரு அடிகளார் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுபவர்.
மருத்துவக் கல்லூரி உள்பட 12 கல்வி நிலையங்களை உருவாக்கி நடத்தி வருகிறார்.
பெண்களுக்கு கோவில்களிலும் முன்னுரிமை கொடுத்து வருபவர். கருவறைக்குள் பெண்களை அனுமதித்து பூஜைகள், வழிபாடுகள் செய்ய வைத்து ஆன்மீக புரட்சி செய்தவர் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications