கல்கி ஆசிரமத்தில் புகுந்து மக்கள் தாக்குதல் - பஸ்களுக்குத் தீவைப்பு
சித்தூர்: ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்தை பொதுமக்கள் தாக்கி சூறையாடி தீவைத்தனர். 2 பஸ்களுக்கும் தீவைக்கப்பட்டது.
ஆசிரமத்தில் பெண்களுக்கு லேகியத்தில் போதை மருந்தை கலந்து தருவதாகவும், பண மோசடி நடப்பதாகவும் கூறி பொதுமக்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர்.
தாக்குதலில் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. 2 பஸ்களுக்குத் தீவைக்கப்பட்டது.
மேலும் ஆசிரமத்திற்குள் இருப்போரையும் பொதுமக்களே மீட்டு வந்தன்.
சித்தூர் மாவட்டம் வரதபாளையம் என்ற இடத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது. இங்குதான் தாக்குதல் நடந்துள்ளது. பொதுமக்கள் தாக்கியதில் கல்கி பகவானின் 3 வேலைக்காரர்களுக்கு சரமாரி அடி விழுந்தது. ஆசிரமத்தின் தகவல் அலுவலகமும் தாக்கி சூறையாடப்பட்டு விட்டது.
பக்தி, முக்தி என்ற பெயரில் இந்த ஆசிரமத்தில் செக்ஸ் அக்கிரமங்கள் நடப்பதாகவும், பெண்களுக்கு போதைப் பொருட்களைத் தருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆசிரமம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் பெருமளவில் விரைந்து வந்தனர். போராட்டக்காரர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தினர். ஆசிரமத்தைக் காக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications