சுங்கத்துறை அதிகாரி கொலை-துணை நடிகை சரண்

ஆதம்பாக்கம் ஆபீசர்ஸ் காலனி 5-வது தெருவில் வசித்து வந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி சாம்சன் (43) ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவி டெய்சி ஜெயராணி மகன்கள் எரிக்சன்), ராபின்சன் ஆகியோர் கண் முன்னே, வீட்டு வாசலில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து டெய்சி ஜெயராணி கொடுத்த புகாரில், தங்கள் வீட்டின் முன் வசிக்கும் துணை நடிகையான பாவ்லினா தான் தனது மகன்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து தப்பியோடிய பாவ்லினா உள்ளிட்ட கொலையாளிகள் 12 பேரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந் நிலையில் பாவுலினாவின் மகன் அப்பு, கூலிப்படையை சேர்ந்த நாகூரான், லட்சுமணன் (27), வினோத் (21), கனி (21), பிரசன்னகுமார் (22), கோபிநாத் (21), ராஜசேகர் (23), மணிகண்டன் (21) ஆகியோர் நேற்று முன்தினமே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந் நிலையில் பாவ்லினா (42), மகன் மணிகண்டன் (21), கூலிப்படையை சேர்ந்த சுகுமார் (27) ஆகியோர் நேற்று செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் நீதிமனறத்தில் சரணடைந்தார்.
பெண் ரெளடியான பாவ்லினா, அப் பகுதியில் கஞ்சா, கள்ளச் சாராயம் விற்று வந்தவர் ஆவார். மேலும் இவர் விபச்சார வழக்கிலும் கைதாகியுள்ளார்.
சில போலீஸ் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்த பாவ்லினா ஆதம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ரெளடித்தனம் செய்து வந்தார்.
கொலை செய்யப்பட்ட சாம்சன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவில் அவரது கொலை அப்படியே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications