கடிதம் கிடைத்தது..மிக்க மகிழ்ச்சி-ஸ்டாலினுக்கு ஜெ பதில்

Subscribe to Oneindia Tamil

Stalin
திருச்சி: கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை ஊரக வளர்ச்சி துறை மூலம் நிறைவேற்றுவதை பெரும் பேறாக கருதுகிறேன் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

திருச்சியில் நடந்த 'கலைஞர் வீட்டு வசதி திட்ட' தொடக்க விழாவில் பேசிய அவர்,

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டு அதை நிறைவேற்றும் பொறுப்பினையும் எங்கள் ஊரக வளர்ச்சித்த துறைக்கு வழங்கி அதன் தொடக்க விழாவை திருச்சியில் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

அது மட்டும் அல்ல இன்னொரு செய்தியையும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். தொடக்க விழாவில் யார் யாரை அழைக்க வேண்டும் என்றும் சொன்னார்.

சட்டமன்றத்தில் இருக்கிற அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்று கூறியதால் எதிர்க்கட்சியில் தொடங்கி புரட்சி பாரதம் கட்சி வரை அத்தனை தலைவர்களுக்கும் கடிதம் எழுதி அழைப்பிதழ் தயாரிக்க வேண்டும் என்பதால், விழாவில் கலந்து கொள்வது பற்றிய தங்களது விருப்பத்தை தெரிவிக்கும்படி நானே அவர்களுக்கு எல்லாம் கடிதம் எழுதினேன்.

ஜெ. அனுப்பிய பதிலுக்கு நன்றி...

இங்கு வந்திருக்கிற தலைவர்கள் அனைவரும் விழாவுக்கு வருவதாக சம்மதம் தெரிவித்து பதில் அனுப்பியவுடன் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவுக்கும் கடிதம் எழுதினேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் கடிதம் வந்திருக்கிறது. கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. சில அலுவல் காரணமாக நான் பங்கேற்க இயலாது என அவர் பதில் அனுப்பி இருந்தார்.

அவருக்கும் விழாவில் பங்கேற்க அத்தனை பேருக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1970ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வரை 36 ஆண்டுகளில் தமிழகத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 77,627.

ஐந்தாம் முறையாக கருணாநிதி முதல்வராகப் பொறுப்பு ஏற்ற பின் 2006ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை 82,000 வீடுகள் கட்டப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டு இதுவரை இந்த 4 ஆண்டுகளில் 42,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 40,000 வீடுகளும் விரைவில் கட்டப்பட்டு திறப்பு விழா காணப்பட இருக்கிறது.

ஆதிதிராவிட மக்களுக்காக 1973ம் ஆண்டில் இந்திரா தொகுப்பு வீடு திட்டத்தை தொடங்கியதும் திமுகஅரசு தான். அந்த திட்டத்தின் தொடக்க விழா செங்கல்பட்டு அருகே காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் நடந்தபோது அதில் கலந்து கொண்டு பேசிய பாபு ஜெகஜீவன் ராம், மக்கள் நல அரசு என்ற வார்த்தைக்கு உண்மையான விசுவாசத்துடன் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு பணியாற்றி வருவதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பாராட்டினார்.

பல திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிற ஊரக வளர்ச்சி துறைக்கு இப்போது இந்த கலைஞர் வீட்டு திட்டத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை எனது வாழ்வில் கிடைக்கப் பெறாத பெரும் பேறாக கருதுகிறேன் என்றார் ஸ்டாலின்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், ஏழை மக்களின் கனவுத் திட்டமான இந்த திட்டத்தை வழங்கியதற்காக பாமக சார்பில் நான் நன்றியை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.

விழாவி்ல் எஸ்.வி.சேகர்:

விழா அழைப்பிதழில் சுயேச்சை எம்எல்ஏவான முன்னாள் அதிமுக எமஎல்ஏ எஸ்.வி. சேகரின் பெயர் இல்லாவிட்டாலும் அவருக்கு முன் வரிசையில் இடம் தரப்பட்டிருந்தது.

பின்னர் அவருக்கு பேசவும் வாய்ப்பு தரப்பட்டது. எஸ்.வி.சேகர் பேசுகையில், இந்த விழா மேடையே பஞ்சாயத்து செட்' போல அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் கருணாநிதி நாட்டாமை போல் வீற்று இருக்கிறார். நாட்டாமை தீர்ப்பு எப்போதும் தவறியதே கிடையாது. அது மாத்தி சொல்ல முடியாத தீர்ப்பாகத்தான் இருக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+