வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா திடீர் கொழும்பு பயணம்
Subscribe to Oneindia Tamil

ஏற்கனவே இந்தியத் தூதராக கொழும்பில் இருந்தவர் நிரூபமா. மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அவர் கொழும்பு செல்கிறார்.
அவர் எதற்காக இலங்கை செல்கிறார் என்று தெரியவில்லை. இருப்பினும் சமீபத்தில் கோத்தபயா ராஜபக்சே டெல்லி வந்து நிரூபமா ராவ், எஸ்.எஸ்.மேனன் ஆகியோரை சந்தித்துப் பேசி விட்டுச் சென்றார்.
இந்தப் பின்னணியில் நிரூபமா கொழும்பு செல்வது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் அங்கு சூடு பிடித்துள்ளது. இந்தப் பின்னணியும் நிரூபமா பயணத்தை முக்கியத்துவமாக்கியுள்ளது.
அரசியல் தீர்வு குறித்கு இலங்கையுடன் நிரூபமா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிரூபமாவின் பயணம் குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications