பாபா அணுஆராய்ச்சி மைய பெண் விஞ்ஞானி தூக்குபோட்டு தற்கொலை
மும்பை: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த இளம் பெண் விஞ்ஞானி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோல்கத்தாவைச் சேர்ந்தவர் தீத்தால் பால் (27); திருமணமாகாதவர். இவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ரேடியோ கெமிஸ்டிரி துறையில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்தார்.
அணு சக்தி நகரில் உள்ள அலுவலக குடியிருப்பில் தங்கியிருந்த தீத்தால், சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலையில் மும்பை திரும்பினார்.
உடனடியாக வேலைக்கு சென்ற அவர், பின்னர் மாலை 4.30 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினார். சிறிது நேரம் கழித்து கொல்கத்தாவில் இருந்து தீத்தால் பாலுக்கு அவரது தந்தை போன் செய்தார். ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை.
உடனே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அவர் போன் செய்து விவரத்தை கூறினார். தீத்தால் பாலின் வீட்டுக் கதவை அக்கம்பக்கத்தினர் தட்டினர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை.
சந்தேகம் அடைந்த அவர்கள், மாற்றுச் சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தீத்தால் பால், ஜன்னல் கம்பி ஒன்றில் துப்பட்டா துணியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
அதிர்ந்து போன பக்கத்து வீட்டுக்காரர்கள், தீத்தால் பாலை கீழே இறக்கி அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீத்தால் பாலை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விஞ்ஞானி தற்கொலை தொடர்பாக டிராம்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 22ம் தேதி பாபா அணுஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மகாதேவன் அய்யர் கொலை செய்ப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்த 10 நாளில் பெண் விஞ்ஞானி தற்கொலை செய்து கொண்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications