உலகக் கோப்பை ஹாக்கி- இந்தியாவுக்கு 2வது தோல்வி - அரை இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்தது
டெல்லி: ஸ்பெயினுடன் நடந்த மோதலில் இந்தியா 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து அரை இறுதிக் கனவு தகரும் நிலையைச் சந்தித்துள்ளது.
உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்தியா, 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் நேற்று 3வது போட்டியில் வலுவான ஸ்பெயினை சந்தித்தது.
நேற்று நடந்த போட்டி இரு அணிகளுக்குமே கிட்டத்தட்ட வாழ்வா சாவா போட்டிதான். காரணம், ஸ்பெயின் அணியும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருந்தது.
முதல் பாதி ஆட்டத்தின்போது ஸ்பெயின் 2-0 என்ற கணக்கில் முன்னிலை எடுத்து விட்டது. பின்னர் 2வது பாதியில் மேலும் 3 கோல்களைப் போட்டு இந்தியாவை திணறடித்து விட்டது.
முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் போன இந்தியா, 2வது பாதி ஆட்டத்தில் சற்று வீறு கொண்டு எழுந்தது. சந்தீப் சிங் மூலம் ஒரு கோல் கிடைத்தது. அடுத்த நான்கு நிமிடங்களில் மேலும் ஒரு கோலையும் இந்தியா போட்டது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை.
இந்தத் தோல்வியின் மூலம் இந்தியாவின் அரை இறுதிக் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் 2 போட்டியில் இந்தியா ஆட வேண்டியுள்ளது. அந்த இரண்டிலும் இந்தியா கண்டிப்பாக வென்றாக வேண்டும். அதில் ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால் கூட அத்தோடு கதை முடிந்தது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications