கோவை சட்டக் கல்லூரியில் ராகிங்-பதற்றம்; 8 பேர் சீனியர்கள் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை சட்டக்கல்லூரியில் சீனியர் மாணவர்கள் தன்னை ராகிங் செய்ததாக முதலாமாண்டு மாணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கோவை சட்டகல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவன் நவீன் குமார். இந்த மாணவன் மருதமலை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அதே கல்லூரியை சேர்ந்த 2ம் மற்றும் 3ம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் அவரை ராகிங் செய்துள்ளனர்.

இதனையடுத்து மாணவன் நவீன் குமார், சீனியர் மாணவர்கள் தன்னை ராகிங் செய்ததாகவும், இரும்பு ராட் மற்றும் ஹாக்கி மட்டை ‌கொண்டு தாக்கியதாகவும் போலீசில் புகார் கொடுத்தார்.

இதனால் கல்லூரியில் பதட்டமான சூழல் நிலவுகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க சட்டக்கல்லூரி வளாகத்தில் பேரூர் டிஎஸ்பி முத்தரசு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய சீனியர் மாணவர்கள் 8 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+