15 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கும் மகளிர் மசோதா நாளை நிறைவேற்றம்!
டெல்லி: கடந்த 15 ஆண்டுகளாக இழுபறியாக உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாளை ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி உள்ளிட்டவை தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் இம்மசோதாவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதால் இம்முறை மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது எனத் தெரிகிறது.
இந்திய அரசியல் சாசன சட்டம் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்கியுள்ளது.
ஆட்சி அதிகாரங்களில் அமரவும், தேர்தல்களில் போட்டியிடுவதில் ஆண்-பெண் என்ற பாகுபாடு கிடையாது என்பதை அரசியல் சாசனத்தின் பிரிவுகள் தெளிவாக உறுதிபடுத்துகின்றன.
எனினும் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறிப்பிடுப்படி இல்லை. காரணம் முக்கிய அரசியல் கட்சிகள் அதிக அளவில் பெண் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை.
கடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 829 ஆண் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை வெறும் 85 மட்டுமே.
லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், முலாயமின் சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் 323 ஆண் வேட்பாளர்களை நிறுத்திவிட்டு, 28 பெண்களை மட்டுமே தங்களின் வேட்பாளர்களாக களமிறக்கின.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் இடம்பெறும் உறுப்பினர்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்களும், பெண்களும் சம அளவில் அங்கம் வகிக்கும் இயல்பான ஜனநாயக பிரதிநிதித்துவ நிலையை 50 ஆண்டுகளாகியும் எட்ட முடியாத காரணத்தால், 33 சதவீத இடஒதுக்கீட்டை மகளிருக்கு வழங்க 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா உருவாக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி காலத்தில் திட்டமிடப்பட்ட இந்த மசோதா கடந்த 1996ம் ஆண்டு தேவகவுடா பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் முதலில் அறிமுகமாகி சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.
அதன் பிறகு பல முறை மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாமல் இருந்து வருகிறது. மகளிருக்கான இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி ஆகியவை தொடர்ந்து இந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் செய்து வந்தன.
இந்நிலையில் தற்போது இம்மசோதாவை நிறைவேற்றியே தீருவது என காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. நாளை மகளிர் தினத்தன்று ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வதாக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அறிவித்தார்.
இதையடுத்து பாஜக, கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களின் ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க தொடங்கிவிட்டன.
அனைத்து கட்சிகளையும் முந்திக்கொண்டு செயல்பட்ட பாஜக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா பாஜவின் கனவு என்று கூறி ராஜ்ய சபா உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தெரிவிப்பதற்கான கொறடா உத்தரவை முன்னதாகவே வழங்கிவிட்டது.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், ஆகாலிதளம், தேசியவாத காங்கிரஸ் என வரிசையாக பல கட்சிகளும் தங்களின் ஆதரவை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன.
15 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் தற்போது, தனது முடிவை மாற்றிக்கொண்டு மசோதாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவின் விருப்பம் வேறு மாதிரி இருந்தாலும், தற்போது மசோதாவை ஆதரிப்பதாகவும், ஆனால் உள் ஒதுக்கீடு அவசியம் என வலியுறுத்துவதாகவும் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
நிதிஷ்குமாரின் இந்த முடிவை காங்கிரஸ் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. ஐஜத, ராஷ்ட்ரிய ஜனதா தளமும், சமாஜ்வாதி தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தும், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கும் தங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
எனினும், நாளை திங்கள் கிழமை ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறுவது உறுதியாகி விட்டது.
ஆனால், அதற்கான பெருமையை யார் தட்டிச் செல்வது என்பதில் தான் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே தற்போது போட்டி நிலவுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications