நெல்லையில் வி.சி சார்பில் மகளிர் விடுதலை இயக்க மாநாடு - திருமா பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உழைக்கும் மகளிர் உரிமை மாநாடு நடக்கிறது. மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்கிறார்.

உலக மகளிர் தினத்தை ஒட்டி இன்று 8ம் தேதி பாளை ஜவஹர் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உழைக்கும் மகளிர் உரிமை மாநாடு நடக்கிறது.

பிற்பகல் 2 மணிக்கு இயக்க கொடியேற்றப்படுகிறது. மகளிர் விடுதலை இயக்க நெல்லை மாநகர செயலாளர் அமுதா வரவேற்கிறார். துணை செயலாளர் நிலா நிகழ்ச்சிகளை தொகுத்தி வழங்குகிறார்.

மாலை 5.30 மணிக்கு நடக்கும் மாநாட்டிற்கு மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் நாற்சோனை தலைமை வகிக்கிறார். நெல்லை மாவட்ட செயலாளர் செல்லையா பாண்டியன், மாநகர செயலாளர் மோகன் முன்னிலை வகிக்கின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர்கள் சிந்தனை செல்வன், களைகோட்டுதயம், ரவிக்குமார் எம்எல்ஏ, பொருளாளர் முகமது யூசுப், நெல்லை தொகுதி எம்பி ராமசுப்பு, மாலைராஜை எம்எல்ஏ உள்ளிட்டோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

இரவு 7 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பேசுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+