ஆசிரமத்தில் நடந்தது கொலை அல்ல-நித்யானந்தா சீடர்கள்
பெங்களூர்: நித்தியானந்தா ஆசிரமத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த பக்தர் கொலை செய்யப்படவில்லை. மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார். அதற்கான மருத்துவ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்று பிடதி தியான பீட நிர்வாகிகள் கூறினர்.
பெங்களூர் பிடுதியில் உள்ள நித்யானந்தா தியான பீடத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், மூத்த சாமியாருமான நித்ய சச்சிதானந்தா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா சல்லாபம் செய்த வீடியோ விவகாரம், தியான பீடத்தில் பக்தர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் புகார்கள் உள்ளிட்டவை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து சச்சிதானந்தா விளக்கமளிக்கையில்,
பிடுதி ஆசிரமத்தில் கனடா நாட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டு இருக்கிறது. அந்த கனடா பக்தர் கொலை செய்யப்படவில்லை. இந்த புகார் முற்றிலும் உண்மைக்கு மாறானது.
கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி கனடா நாட்டை சேர்ந்த மெல்வின் பொய்ட் டையமன்ட் என்பவர் மாடியில் இருந்து திடீர் என்று தவறி கீழே விழுந்தார். அதில் அவர் காயமடைந்து இறந்தார்.
இது பற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தோம். இந்த தகவலை அவர்கள் சந்தேகமின்றி ஏற்றுக்கொண்டனர். இதற்கான பிரேத பரிசோதனை அறிக்கை உள்பட எல்லா ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது.
அதே போல் திருச்சியை சேர்ந்த சுரேந்தர் இங்கு தான் இருக்கிறார். அவர் இங்கு அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவரை மீட்டு கொடுக்கும்படியும் அவரது பெற்றோர் தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.
சுரேந்தரே அவரது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து இருக்கிறார். 'எவ்வித வற்புறுத்தலினாலும், தியான பீடத்தில் இறங்கவில்லை. என்னுடைய முழு சுய உணர்வோடும், விருப்பத்தினாலும் தான் முழுமையாக இங்கு இருக்கிறேன் என்பதை ஆணித்தரமாக தெரிவித்து கொள்கிறேன்.
தியான பீடத்துக்கு எதிராக கொடுத்து உள்ள அனைத்து புகார்களையும் வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்' எனறு சுரேந்தர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
நித்யானந்தா ஒரு ஆன்மிக குருவாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். அவர் தனது 3வது வயதில் இருந்து ஆன்மிக பயணத்தை தொடங்கினார். அவர் தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார். அவரது வழியில், நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்.
பிடுதி ஆசிரமம் உள்ள நிலத்துக்கு 100 சதவீதம் சட்ட ரீதியாக பட்டா உள்ளது. நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கூறுவது தவறு.
நித்யானந்தா சாமிகள் பற்றிய ஆபாச வீடியோ காட்சிகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. வீடியோ காட்சிகளில் இருப்பது நித்யானந்தா இல்லை என்று சொல்ல மாட்டோம். ஆனால், உண்மை என்றும் சொல்ல மாட்டோம்.
இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய சிடியை லெனின் என்பவர் தயாரித்துள்ளார். அவர் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். அவருக்கு இதுபோன்ற நவீன உத்திகளை கையாளத் தெரியாது.
லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். வீடியோ காட்சிகள் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட அடுத்த நாளே சாமிகள் இங்கு வந்திருப்பார். ஆனால் இங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. அதனால் அவர் இங்கு வரவில்லை.
நடிகை ரஞ்சிதா கடந்த 7 மாதங்களாக ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார். மற்ற பக்தர்களை போல் அவரும் ஒரு பக்தராக தான் வந்து சென்றார்.
ரஞ்சிதா நித்யானந்தாவின் தீவிர பக்தை என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது. நாட்டில் ஒருவர் மீது யார் வேண்டுமானாலும் புகார் கூறலாம். ஆனால் அந்த புகார்கள் அனைத்தும் உண்மை ஆகாது.
எங்கள் மீதான புகார்கள் குறித்து உண்மையை உலகுக்கு தெரிவிக்க நாங்கள் சட்டரீதியாக அணுக முடிவு செய்திருக்கிறோம்.
சாமிகள் பற்றி ஊடகங்களில் வரும் யூக செய்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. என்னால் யூகிக்கவும் முடியாது.
இதுவரையில் எங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்தது பற்றி தகவல் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரமத்தில் நாங்கள் தொடர்ந்து எங்களது வழக்கமான பணிகளை செய்து வருகிறோம். போலீசார் எங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள் என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications