டபிள்யூ.ஆர்.வரதராஜன் தற்கொலைதான் செய்து கொண்டார் - போலீஸ் கமிஷனர்
சென்னை: மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டபிள்யூ.ஆர்.வரதராஜன், கொலை செய்யப்படவில்லை. நீரில் மூழ்கியே தற்கொலை செய்து கொண்டார் என்று பிரேதப் பரிசோதனையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
டபிள்யூ.ஆர்.வரதராஜன் மரணம் குறித்து சர்ச்சை எழுந்தது. சமீபத்தில் மக்கள் டிவி செய்தியில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டிருப்பதாகவும் இது கூறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் டிவி அலுவலகத்தைத் தாக்க பதிலுக்கு பாமகவினர் மார்க்சிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கினர்.
இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டபிள்யூ.ஆர்.வரதராஜன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியதால்தான் அவர் இறந்துள்ளார் என்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தெரிவித்துள்ளார்.
தடய அறிவியல் சோதனையில் அவரது வயிற்றில் இருந்து எடுத்த உள்ளுறுப்புகளில் நச்சுத்தன்மையுள்ள பொருள் எதுவும் இல்லை.
அவரது உடலில் சிறு காயங்கள் உள்ளன. ஆனால் அவற்றால் மரணம் ஏற்படவில்லை. ஏரியில் உள்ள ராட்சத குழாய்களின் வழியாக நடந்து சென்றபோது அவர் கீழே விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
நேற்று மாலை காவல்துறைக்கு பிரேதப் பரிசோதனை வந்து சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications