அடுத்த ஆண்டில் மட்டும் 10 லட்சம் புதிய வேலைகள்!
சென்னை: அடுத்த நிதியாண்டில் மட்டும் புதிதாக வேலைக்கு அமர்த்தப்படுவோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா...? நம்பினால் நம்புங்கள், 10 லட்சம்!
10 லட்சம் புதிய பணியாளர்களை நாட்டின் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் நியமிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது!
2010 -2011 ஆண்டு வேலைவாய்ப்பு போக்கு குறித்து மா ஃபா நிறுவனம் 11 துறை சார்ந்த 1000 இந்திய நிறுவனங்களில் விரிவான சர்வே மேற்கொண்டது.
இந்த சர்வே முடிவுகளின்படி, உடனடியாக வேலை வாய்ப்பை இந்திய நிறுவனங்கள் அளிக்காவிட்டாலும், அடுத்த நிதியாண்டில் உலகில் வேறு நாடுகளில் இல்லாத அளவு பெரும் வேலை வாய்ப்புகளை தரவிருப்பது தெரிய வந்துள்ளது.
ஐடி துறையில் மட்டும் புதிதாக 1 லட்சம் வேலைகளும், உடல்நலம் / நுகர்வோர் பொருள்கள் சார்ந்த தொழில்களில் 2,95,000 புதிய வேலைகளும் காத்திருக்கின்றன என்கிறது மா ஃபா சர்வே.
இவை தவிர, ரியல் எஸ்டேட் துறையில் 1,36,000 வேலைகள், மருத்துவமனைகளில் 1,37,000 காலியிடங்களும் உருவாகவிருப்பதாக இந்த சர்வே முடிவுகள் கூறுகின்றன.
வங்கித் துறையில் 47000 புதிய பணியிடங்கள் காத்திருக்கின்றனவாம்.
இந்த சர்வே குறித்து மா ஃபா நிறுவன சிஇஓ பாலாஜி கூறுகையில், "நிறுவனங்கள் மத்தியில் ஒருவித எச்சரிக்கை உணர்வைப் பார்க்க முடிகிறது. அதனால்தான் உடனடியாக பேரளவில் வேவை வாய்ப்புகள் இல்லை. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் இன்னும் பொருளாதாரம் சகஜ நிலைக்குத் திரும்பாததால், இங்குள்ளவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குகிறார்கள். அது புரிந்து கொள்ளக் கூடியதே.
ஆனால் அடுத்த நிதியாண்டு மிகப் பிரகாசமாக இருப்பது உறுதியாகத் தெரிகிறது. ஆனாலும் ஐடி, பிபிஓ மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளில் பெரிய அளவு வாய்ப்பு இருக்காது. வங்கிகள், மருந்துத் தயாரிப்பு போன்றவற்றில் எதிர்பாராத அளவு பெரிய வாய்ப்புகள் இளைஞர்களுக்குக் காத்திருக்கின்றன... இந்த சர்வே முடிவுகள் அதிகாரப்பூர்வமானவை..." என்றார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications