லாலு மச்சான் சாது யாதவ் காங். கட்சியிலிருந்து சஸ்பெண்ட்
பாட்னா: முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனரும், முன்னாள் எம்.பியுமான சாது யாதவ் என்கிற அனிருத் பிரசாத்தை காங்கிரஸ் கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது.
லாலுவுடன் முன்பு நெருக்கமாக இருந்தவர் சாது யாதவ்.
ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் எம்.பியாக இருந்தவர். அதிரடி, அட்டாக் எம்.பியாக பீகாரை வலம் வந்தவர். ஏகப்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு இவர் போட்டிய சீட் கேட்டார். ஆனால் லாலு தரவில்லை. இதையடுத்து அதிரடியாக கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்து சம்பரன் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் படுதோல்வி அடைந்தார், டெபாசிட்டையும் இழந்தார்.
இந்த நிலையில் மகளிர் மசோதா விவகாரத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதற்காக அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
இதுகுறித்து பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சர்மா கூறுகையில், மகளிர் மசோதாவுக்கு எதிராக அறிக்கை விட்டுள்ளார் சாது யாதவ். இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் செயலாகும். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதில் உச்சகட்டத்திற்குப் போய் விட்டார் சாது யாதவ். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. எனவே அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
உங்களை ஏன் கட்சியிலிருந்து நீக்கக் கூடாது என்று கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications