முஸ்லீம் ஓட்டுக்களை குறி வைத்து மசோதாவை புறக்கணித்த மம்தா

அடுத்தாண்டு நடக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார் மம்தா. இம் மாநிலத்தில் இஸ்லாமியர் ஓட்டுக்கள் அதிகளவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மசோதாவை ஆதரித்த மம்தா அதில் முஸ்லீமகளுக்கு உள் ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று கோரினார். ஆனால், அதை அரசு ஏற்கவில்லை. இதையடுத்தே, தங்களிடம் உரிய முறையில் விவாதிக்காமல் இந்த மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றுவதாகக் கூறி நேற்று அதன் மீது நடந்த ஓட்டெடுப்பை புறக்கணித்துள்ளார் மம்தா.
ஆனால், அதற்கு வேறு காரணத்தைக் கூறியுள்ளார் மம்தா. நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மத்திய அரசில் இடம் பெற்றுள்ள முக்கிய கூட்டணி கட்சி எங்களது திரிணாமுல் காங்கிரஸ். எனவே மத்திய அரசு எங்களுடன் மசோதா குறித்து ஆலோசனை நடத்தி எங்களுடைய நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், எங்கள் நம்பிக்கையை பெற எந்த முயற்சியையும் காங்கிரஸ் பெறவில்லை.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார்கள். இந்த பிரச்சனையில் இடதுசாரி கட்சிகளின் நிர்ப்பந்தத்துக்கு மத்திய அரசு பணிந்து விட்டது. மசோதாவை நிறைவேற்றும் முன் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
ஆனால் இடதுசாரிகளின் ஆதரவு இருந்ததால் அதை ராஜ்யசபாவில் அவசர அவசரமாக விவாதம் நடத்தி நிறைவேற்றி விட்டார்கள் என்றார் மம்தா.
ராஜ்யசபாவில் 2 எம்பிக்கள் கொண்டுள்ள மம்தாவின் கட்சிக்கு மக்களவையில் 19 எம்பிக்கள் உள்ளனர்.
இப்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 2வது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தான். 18 எம்பிக்கள் கொண்ட திமுக மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.
தவறி விழுந்த பிருந்தா காரத்:
இந் நிலையில் பெண்கள் மசோதா நிறைவேறியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் பிருந்தா காரத் ராஜ்யசபாவில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது அவரை நோக்கி பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பிருந்தா காரத் படிக்கட்டில் தவறி விழுந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications