பிரபாகரனைத் தேடி வரும் தமிழ் அமைப்புகள் - இந்தியாவிடம் இலங்கை கவலை!

சமீபத்தில் கொழும்புக்கு வந்திருந்தார் நிரூபமா ராவ். ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா ஆகியோரை அவர் சந்தித்தார்.
தன்னை நிரூபமா சந்தித்தபோது முக்கியமான விஷயம் குறித்து கவலையுடன் விவாதித்தாராம் ரோஹித. அது பிரபாகரன் குறித்த விஷயம் என்கிறார்கள்.
இதுகுறித்து ரோஹித கூறுகையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு தமிழ் அமைப்புகள் சில தீவிரமாக அவரைத் தேடி வருகின்றன. அரசு இது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
இந்திய அரசுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம். இந்திய வெளி விவகாரச் செயலாளர் நிருபமா ராவ் உடனான சந்திப்பின்போது எமது இந்தக் கவலையைத் தெரிவித்தோம்.
இலங்கை தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும். இறைமையைக் காப்பாற்றுவதற்காக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்போம்.
சர்வதேச ரீதியிலான விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் குறித்து நாங்கள் கொண்டுள்ள கவலையை நிரூபமாவுக்குத் தெரியப்படுத்தினோம் என்று கூறியுள்ளார்.
'பிரபாகரன்' குறித்த கவலை காரணமாகவே இலங்கை அரசு தொடர்ந்து படை பலத்தை அதிகரித்தபடியும், ஆயுதங்களை குவித்தபடியும் உள்ளதாக கூறப்படுகிறது.
பொட்டு அம்மனுடன் தொடர்பு வைத்திருந்தோர் கைது:
இந் நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்பு வைத்திருந்ததாக இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையம் மற்றும் துறைமுகம் வழியாக விடுதலைப் புலிகளுக்கு தேவையான பொருட்களை கடத்த அனுமதித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், போர்நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவரும் பொட்டு அம்மான நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர் என்றும் அரசு குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications