முன்ஜாமீன் கோரி நித்யானந்தாவின் சீடர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை: தன்னைக் கைது செய்யக் கூடாது. முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
அவரது பெயர் ஸ்ரீநித்ய சவரணானந்தா என்ற சந்திரன். இவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
நான் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி வருகிறேன். 1993-ம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சி என்ற இடத்தில் வசிக்கிறேன். டாக்டர் தொழில் தவிர டிராவல்ஸ் நிறுவனமும் நடத்தி வருகிறேன்.
இந்த நிலையில் ஒரு விபத்தில் சிக்கி, 16 ஆண்டுகள் படுக்கையில் இருந்தேன். இதனால் எனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. எனவே நண்பர்களின் ஆலோசனைப்படி நித்யானந்தாவை அணுகினேன். அவர் யோசனைப்படி ஆன்மிகத்தில் ஈடுபட்டதோடு, யோகாசனம் போன்ற பயிற்சியையும் படித்தேன். பின்னர் அவரது சீடரானேன்.
தற்போது நானும் பலருக்கு இந்த பயிற்சியை அளித்து வருகிறேன். நித்யானந்தாவின் சீடர்கள் கூட என்னிடம் பயிற்சி எடுத்துள்ளனர். இந்த நிலையில் நித்யானந்தா பற்றிய படத் தொகுப்பு சமீபத்தில் வெளியானது.
இதனால் மத உணர்வுகளை புண்படுத்துவது(இ.பி.கோ.295 (ஏ) சம்பந்தப்பட்ட வழக்கில் என்னையும் சிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் போலீசார் என்னையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்வார்கள் என்று சந்தேகம் எழுகிறது. எனவே எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
நேற்று இந்த மனு நீதிபதி நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் வக்கீல் முனியப்பராஜ் ஆஜராகி, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து 12ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications