ஆப்கனை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு - விரைவில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுமாறு இந்தியர்களை விரைவில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் தொடர்ந்து குறி வைத்து வேட்டையாடப்படுகிறார்கள் இந்தியர்கள். பல இந்தியர்களை கடத்தி தலையைத் துண்டித்து தலிபான்கள் கொன்றுள்ளனர்.

மேலும் இந்தியத் தூதரகத்தைக் குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. அங்கு பணியாற்றும் இந்தியர்ளின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் பணிகளைக் குறைக்கவும், தேவைப்பட்டால் நிறுத்தவும், தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானை விட்டு இந்தியர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது ஆப்கானிஸ்தானில் 4000 இந்தியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பல்வேறு பணி நிமித்தம் அவர்கள் அங்கு தங்கியுள்ளனர். பலர் இந்திய அரசு சார்பில் பணியில் இருப்பவர்கள். சிலர் தனிப்பட்ட முறையில் பணியில் இருப்பவர்கள் ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+