மாஜி எம்எல்ஏ உள்பட 14 பேர் மீது அடிதடி வழக்கு
சங்கரன்கோவில்: கிராமத்தில் வாறுகால் கட்டுவது தொடர்பாக இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக கடையநல்லூர் மாஜி எம்எல்ஏ உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ளது ஆராய்ச்சிபட்டி கிராமம். கடையநல்லூர் முன்னாள் எம்எல்ஏ சுப்பையா பாண்டியனின் சொந்த கிராமம் இது.
இங்கு பஞ்சாயத்து நிதியில் வாறுகால் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக இரண்டு கோஷ்டிகளிடையே பிரச்னை ஏற்பட்டது.
இதனால் கடந்த 9ம் தேதி சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஆராய்ச்சிபட்டியில் வாறுகால் கட்டுவது தொடர்பாக சமாதான கூட்டம் நடந்தது.
இருப்பினும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சமாதான கூட்டத்திற்கு பின்னர், இரண்டு கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் முன்னாள் எம்எல்ஏ சுப்பையா பாண்டியனின் மருமகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மாரிக்காளை, சின்னத்துரை மகன் வெள்ளத்துரை, லெட்சுமணன் மகன் ராஜதுரை, மாரியப்பன் மகன் முருகன், அய்யாத்துரை, செல்வராஜ், வெள்ளத்துரை ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல ஆரிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் எம்எல்ஏ சுப்பையா பாண்டியன், அவரது மருமகன்கள் முருகன், கணபதி, மாரியப்பன், அய்யாத்துரை உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications