ரூ.600 கோடி சொத்துக்களை மறுத்த ப்ரீத்தி ஜிந்தா!

பாலிவுட் பிரபல தயாரிப்பாளர் கமால் அம்ரோகி. அவருக்கு ஷந்தர், தஸ்தார் என்ற 2 மகன்களும் ருக்சர் என்ற மகளும் உள்ளனர். ருக்சருக்கு வசீம் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் கமால் அம்ரோகியின் மகன்கள்- மகள்- பேரன் ஆகியோருக்கிடையே சொத்துச் சண்டை மூண்டது.
இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடர்ந்தனர் வாரிசுகள்.
அதனால் அம்ரோகி கடும் மனஉளைச்சலில் அவதிப்பட்டார். அம்ரோகிக்கு ஆதரவாக செயல்பட்டார் ப்ரீத்தி ஜிந்தா. தயாரிப்பாளரின் மகன்கள் மகள் இடையேயும் சொத்துத் தகராறை தீர்க்க உதவி செய்து வந்தார்.
ப்ரீத்தியின் நல்ல குணத்தால் கவரப்பட்ட அம்ரோகியின் மூத்த மகன் ஷந்தர், ப்ரீத்தியை தனது வளர்ப்பு மகள் என்று அறிவித்து விட்டார். அத்துடன் தந்தையின் சொத்து தனக்கு கிடைக்க ஆதரவாக இருந்து வரும் ப்ரீத்திக்கு ரூ.600 கோடி சொத்துகள் மற்றும் வர்த்தகத்தை முழுவதுமாக எழுதி வைக்கப் போவதாக அதிரடியாக அறிவித்தார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த ப்ரீத்தி ஜிந்தா இந்த சொத்துக்கள் எதுவும் தனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தயாரிப்பாளர் கமால் அம்ரோகியின் சொத்துக்களுக்கு எந்த வகையிலும் நான் வாரிசு இல்லை. சொத்து முழுவதும் அவரது சொந்த வாரிசுகளைச் சேர்ந்தது. அதில் எனக்கு எதுவும் வேண்டாம். நான் எப்போதும் போல முடிந்தவரை உதவியாக இருக்கவே விரும்புகிறேன்!" என்றார்.
ப்ரீத்தியின் இந்த மறுப்பு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது பாலிவுட்டில்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications