ராஜ்யசபா தலைவரிடம் மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் உத்தரவு ரத்தாகும் - மத்திய அரசு
டெல்லி: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 7 எம்.பிக்களும் ராஜ்யசபா தலைவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டால், அவர்களது சஸ்பெண்ட் உத்தரவு ரத்தாகும் வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் மார்ச் 8ம் தேதி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
சிலர் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி கையில் வைத்திருந்த மசோதா நகலைக் கிழித்து தூக்கிப் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அடுத்த நாள் 9ம் தேதி சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த 7 எம்.பிக்களை இந்த கூட்டத் தொடர் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் அன்சாரி உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கைக்கு தற்போது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. பாஜகவிலும் கூட இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் இந்த விவகாரம் வலுத்து வருவதைத் தொடர்ந்து, எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற பரிகாரம் ஒன்றைக் கூறியுள்ளது மத்திய அரசு.
இந்த பிரச்சினை, ராஜ்யசபாவில் நேற்று எதிரொலித்தது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்களுக்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும், அந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி பேசினார்.
அதேபோல சீதாராம் எச்சூரியும், சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ரு கோரினார். இதற்கு காங்கிரஸ், ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் கூறுகையில், உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்பதாக கூறினால் போதும். அல்லது வருத்தம் தெரிவிப்பதாக கூறினால் கூட போதும். சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறப்படும் வாய்ப்புள்ளது என்றார்.
அதேசமயம், சஸ்பெண்ட் ஆன எம்.பிக்கள், மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இருப்பினும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications