காங்.எம்.பிக்கள், மனைவியருக்கு விருந்தளித்த சோனியா காந்தி
டெல்லி: மகளிர் மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ள நிலையில் நேற்று இரவு காங்கிரஸ் எம்.பிக்களுக்கும், அவர்களது மனைவியருக்கும் விருந்தளித்துக் கெளரவித்தார் கட்சித் தலைவர் சோனியா காந்தி.
அமைச்சர்களும் தங்களது மனைவியருடன் இதில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.
ராகுல் காந்தியும் கூட இதில் கலந்து கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
சோனியா காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, ஜன்பாத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாக இந்த விருந்து நிகழ்ச்சிக்கு எம்.பிக்கள், அமைச்சர்களுடன், அவர்களது மனைவியரும் அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிய அளவில் அதேசமயம் படு இனிமையானதாக விருந்து இருந்ததாக அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். வெஜிட்டேரியன் மற்றும் நான் வெஜிட்டேரியன் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கும் சற்று கூடுதலாக விருந்து நீடித்தது.
இந்த விருந்து நிகழ்ச்சியின்போது மகளிர் மசோதாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதா என்று ஒரு மூத்த உறுப்பினரிடம் கேட்டபோது, அதற்கெல்லாம் நேரமே இல்லை. வெறும் விருந்து மட்டும்தான் நடந்தது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications