போலி பாஸ்போர்ட் மூலம் சவுதி பயணம் - வாலிபர் கைது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சவுதி அரேபியா செல்ல இருந்தவரை பயண நாளில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியை சேர்ந்த ஒருவர் போலி பெயரில் பாஸ்போர்ட் எடுத்து நேற்று வெளிநாடு செல்ல இருப்பதாக எஸ்பி ஆஸ்ரா கார்கின் இ-மெயிலுக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து திருவனந்தபுரம், சென்னை விமான நிலையங்களுக்கு போலீசார் தகவல் அளித்தனர். குற்றாலம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இலஞ்சி ஜூப்லி இரண்டாவது மேலத்தெருவை சேர்ந்த செல்வகுமார் சிக்கினார். இவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் பெயரில் இருந்த ரேசன் கார்டை பயன்படுத்தி கடந்த 97 மார்ச் 26ம் தேதி பாஸ்போர்ட் வாங்கியுள்ளார்.
சவுதி அரேபியாவில் முஸ்லிம்களுக்கு வேலையில் முன்னுரிமை கிடைக்கும் என்பதால் முஸ்லிம் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் எடுத்ததாகவும் போலீசாரிடம் செல்வகுமார் தெரிவித்தார்.
இதுவரை 4 முறை போலி பாஸ்போர்ட் மூலம் சவுதி அரேபியா சென்று வந்த செல்வகுமார் நேற்று ஐந்தாம் முறையாக காலை 5.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் பக்ரைன் சென்று அங்கிருந்து சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டுருந்தார்.
அதற்குள் அவரை போலீசார் மடக்கி கைது செய்தனர். அவரிடம் இருந்த போலி பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து எஸ்பி ஆஸ்ரா கார்க் கூறும்போது, 'நெல்லை மாவட்டத்தில் யாராவது போலி பெயர், போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் வாங்கியது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற தகவல்களை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications