சட்டசபை கட்டுமானப் பணி - தொழிலாளர்களுக்கு பிரியாணி வழங்கினார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக புதிய சட்டப்பேரவையை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள வடஇந்திய தொழிலாளர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்பட 10 ஆயிரம் பேருக்கு முதல்வர் கருணாநிதி இன்று பிரியாணி விருந்து வைத்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், தமிழகத்தின் புதிய சட்டப்பேரவை வளாகமும் (பிளாக் ஏ) தலைமைச் செயலக வளாகமும் (பிளாக் பி) கட்டப்பட்டு வருகிறது.

புதிய சட்டப்பேரவை வளாகம் ரூ.425 கோடியிலும் (பிளாக் ஏ), தலைமைச் செயலக வளாகம் (பிளாக் பி) ரூ.279.5 கோடியிலும் கட்டப்பட்டு வருகின்றன.

இதில், புதிய சட்டப்பேரவை வளாகத்தில், சட்டப்பேரவை அமையவுள்ள 6 மாடி கட்டிடத்தில் முதல் இரண்டு தளங்கள் மட்டும் மார்ச் 12ம் தேதிக்குள் கட்டி முடிக்கப்பட்டன. புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று திறந்து வைத்தார்.

இந்த வளாக கட்டுமானப் பணிகளில் பீகார், ஜார்கண்ட், மேற்குவங்காளம் போன்ற வடமாநிலங்கள் மற்றும் ஆந்திரம், தமிழகத்தை சேர்ந்த 6 ஆயிரம் தொழிலாளர்கள் இரவும், பகலுமாக வேலை செய்து வருகிறார்கள்.

கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டியது முதல் பம்பரம் போல் சுழன்று, சுழன்று வேகமாக வேலை செய்து வருகிறார்கள். அதுவும், வரும் 13ம் தேதிக்குள் சட்டப்பேரவை கூடத்தை தயார் செய்ய வேண்டும் என்பதால் மிகவும் ஊக்கத்துடன் பணிபுரிந்தார்கள்.

தொழிலாளர்களின் ஓய்வு காணா உழைப்பின் பலனாக, திறப்புவிழா நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில் அவர்களுக்கு நன்றி செலுத்தவும், உற்சாகமளிக்கும் வகையிலும் இன்று பிரமாண்ட விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னாக காலையில், சென்னை சங்கமம் குழுவினரின் கலை விருந்து அளிக்கப்பட்டது. இதையடுத்து பிற்பகல் 12 மணிக்கு பிரியாணி விருந்து நடந்தது.

6 ஆயிரம் தொழிலாளர்கள், 2 ஆயிரம் போலீசார் மற்றும் இந்த கட்டுமானத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகள், கட்டுமான நிறுவனத்தினர் ஆகிய 2 ஆயிரம் என 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி வந்தனர். சபாநாயகர் ஆவுடையப்பனும் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,

நம்முடைய குறிக்கோள் நிறைவேற சிலை வடிவம், சிற்பவடிவம், கலைவடிவம், அனைத்திலும் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்கள். அவர்களும் வாழ்ந்து இருக்கிறார்கள்.

அனைத்து தொழிலாளர்களுக்கும், இந்த பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்களுக்கும், அமைதிக்கு பாடுபட்ட காவல் துறையினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்து ராம் என்னிடம் இந்த விழாவில் இந்தி பாட்டு பாடுகிறார்களே என்று கேட்டார். அப்போது நான் பாட்டுக்கு பரவாயில்லை. தமிழ் நாட்டுக்கு அது தேவை இல்லை என்று நினைத்து கொண்டேன். எந்த ஒரு மொழியும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு இருந்தால் பரவாயில்லை. ஆனால் எந்த மொழியும், மற்ற மொழியை ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்பவில்லை. இந்த தொழிலாளர்கள் தமிழ் பாட்டு பாடும் போது வெறுத்து ஒதுக்கவில்லை.

இவ்வாறு இருக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். மிக உயர்ந்த இந்த கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு அரசு மட்டும் காரணம் அல்ல. ஒப்பந்ததாரர்கள், வடிவமைப்பாளர்பகள், குறிப்பாக எந்த ஆபத்தை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றிய உங்களுக்கு என் தலை தாழ்த்திய வணக்கம்.

இந்த கட்டிடம் எழிலோடு வரவேண்டும் என்பதற்காக நான் ஒவ்வொரு நாளும் வந்து தொழிலாளர்களை, செயலாளர்களை தூண்டி விட்டு சில திருத்தம் செய்ய வேண்டும் என்று தொந்தரவு கொடுத்து இருக்கிறேன்.

நானும் சுகம் கண்டேன், நீங்களும் கண்ட சுகத்தின் காரணமாகவே இந்த உயர்ந்த கட்டிடம் உருவாகி இருக்கிறது.

பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரம், ஓய்வு பெற்ற முன்னாள் செயலாளர் ஆதி சேஷையா, தலைமை செயலாளர் ஸ்ரீபதி, கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+