சத்துணவுத் திட்டத்தின் மூலம் நாட்டுக்கே முந்மாதிரியாகத் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். - மன்மோகன் புகழாரம்

சென்னையில் நேற்று புதிய சட்டசபை வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது...
தமிழக மக்களாகிய உங்களை மீண்டும் ஒருமுறை சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பிரமாண்டமான கட்டிடத்தை கட்டி எழுப்பி இருக்கும் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு முதலில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு சட்டசபை மற்றும் தலைமை செயலகத்துக்கு பெருமை சேர்த்த ஒவ்வொரு நபர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
நூற்றாண்டு கால பாரம்பரியம் மிகுந்ததாக உள்ள முந்தைய தமிழக சட்டசபை, இந்தியாவுக்கு பெருமை சேர்த்த குடிமகன்கள், குடிமகள்களை கண்டுள்ளது. குறிப்பாக ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆகியோர் சுதந்திர இந்தியாவின் இயக்கங்களுக்கும், தமிழக மக்களுக்கும் பெருந்தலைவர்களாக திகழ்ந்தனர்.
அவர்களைப்போல் சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களும் தேசத்துக்காக மிகப்பெரிய அளவில் சேவையாற்றியுள்ளனர். தமிழக முன்னேற்றத்துக்கும், இந்தியாவின் மேம்பாட்டுக்கும் இவர்கள் ஒவ்வொருவரும் அரும்பாடுபட்டனர்.
பசுமைப்புரட்சிக்கு சி.சுப்பிரமணியம், தமிழகத்தில் தொழில் மேம்பாட்டுக்கு ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் பங்களித்தனர். மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் தேசத்துக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். இன்று அவரது திட்டத்தை மேம்படுத்தி நாடு முழுக்க செயல்படுத்தி வருகிறோம்.
தற்போது முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் நான் நின்று கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற கட்டிடத்தை கட்டுவதற்கான முடிவை தமிழக அரசியலில் மாபெரும் மனிதராக விளங்கும் இவரால்தான் எடுக்க முடியும்.
கலைஞர் கருணாநிதியின் தலைமைத்துவம், அறிவு போன்றவற்றை பெறுவதால், மத்தியில் ஆட்சி நடத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய ஆதாயங்களை அடைந்துள்ளது. அடிக்கடி நானும் அவரது ஆலோசனைகளை கேட்டு பெறுவதுண்டு.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் கலைஞர் கருணாநிதி இருக்கிறார். எனவே தேச விவகாரங்களில் அவரது அனுபவம், ஞானம் ஆகியவற்றை பெற்றுக் கொள்வதால் நாங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்.
முதல்-அமைச்சர் கருணாநிதியின் தலைமையில், இந்தியாவிலேயே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. ஊரக வளர்ச்சி, நிலப்பட்டா வழங்குவது போன்றவற்றில் புதிய உயரத்தை தமிழகம் எட்டியுள்ளது.
சக்தி மிகுந்த ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கு தமிழகம் ஒரு கேந்திரமாக இருக்கிறது. மிக நவீன ஜவுளி ஆலைகள் இங்கு உள்ளன.
நகர்ப்புற வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், தரமான கல்வி வழங்குவதிலும் கண்ணைக்கவரும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மிகுந்த பொறுப்பு மற்றும் திறமை வாய்ந்த மாவட்ட-நகராட்சி நிர்வாகங்களை கொண்ட மாநிலம் என்ற பெருமையும் பாரம்பரியமும் தமிழகத்துக்கு உண்டு. இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம்தான் முன் உதாரணம்.
இதை நான் சொல்வதற்கு, நம் கண் முன்பு எழுந்து நிற்கும் இந்த புதிய கட்டிடம் காரணமாகும். பழைய சட்டசபை 1937-ம் ஆண்டு செயல்பட தொடங்கியது. மிகப்பெரிய பாராளுமன்றவாதிகளை அது உருவாக்கியுள்ளது. ஜனநாயகத்தை வலுப்படுத்திய பெரிய தலைவர்களின் வீடாக அது திகழ்ந்தது. இங்குள்ள எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகத்தினரும்தான் தமிழகத்தின் மேம்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர்கள்.
வேளாண்மை, தொழிற்சாலை, கல்வி ஆகியவற்றில் வளர்த்த மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு, இங்குள்ள தரமான அரசியல் தலைமைகளும், திறமையான நிர்வாக இயந்திரமும்தான் காரணம். தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்ற உள்ளாட்சி அமைப்புகள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகப்பணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தில் நான் பாராட்டுகளை கூறிக்கொள்கிறேன். இந்த பாரம்பரியத்தையும், பெருமையையும் அப்படியே நாம் விட்டுவிடக்கூடாது.
பல மாற்றங்களை கொண்டு வரும் நாடாக இந்தியா இருக்கிறது. தற்போது தரமான மாற்றமும், அதிகபட்ச முன்னேற்றமும் தேவைப்படுகிறது. நாம் வித்தியாசமான எண்ணங்களோடு பல விஷயங்களில் மாற்றங்களை கொண்டு வருவது அவசியம். மாற்றங்களை கொண்டு வருவதற்கு தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் வழிகாட்டுவார்கள் என்று நம்புகிறேன். கல்வி கற்றவர்கள், திறமையானவர்கள், சமத்துவ சமுதாயம் ஆகியவையே தற்போது நமக்கு அவசியம்.
இளைஞர்கள் தேவை...
புதுமைகளை படைப்பவர்கள் நமக்கு தேவை. தடைகளை தாண்ட முயற்சிப்பவர்கள் அல்ல, தடைகள் வராமல் அவற்றை தவிர்க்க தெரிந்தவர்கள்தான் இப்போது தேவை. பழைய நல்ல காரியங்கள் புதிய வழியில் செய்யப்பட வேண்டும். புதுமையின் காலம் நம்மை நோக்கி வருகிறது. புதுமைகளை படைக்காமல் விட்டுவிட்டால், சரித்திரத்தில் நாம் பின்நோக்கி தள்ளப்பட்டுவிடுவோம்.
சமத்துவம், சமூகநீதிக்காக போராடும் பாரம்பரியமும், புகழும் மிக்க திராவிட கலாசாரத்தை கொண்டவர்கள் நீங்கள். இந்த எண்ணங்களை செயல்படுத்தாமல் எந்த சமுதாயமும் முன்னேற முடியாது. தமிழக அரசு தொடர்ந்து இந்த உன்னத கொள்கையுடன் சட்டசபையில் செயல்படும் என்று நம்புகிறேன்.
சட்டசபை ஒரு புனிதமாக இடம். தங்களது குறைகளை தீர்ப்பதற்காக நம்மை பிரதிநிதியாக அனுப்பியுள்ள சகோதர, சகோதரிகளுக்காக பணியாற்றும் இடம் அது. அரசியல் அமைப்பு சட்டத்தின் கொள்கைகளையும், நோக்கங்களையும் செயல்படுத்த வேண்டிய இடம் சட்டசபை. அவர்கள் தங்களது கடமைகளை திறமையாக செய்வதற்கு பல விஷயங்களை கற்றவர்களாக இருப்பது மட்டுமல்ல, இந்திய ஆட்சி அமைப்புமுறையின் அடிப்படை பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும்.
அனைத்து அதிகாரமும் சமுதாய நன்மைக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் முன்னேற்றம் மற்றும் சுயமரியாதைக்காக முனைப்பாக செயல்பட முடியும். மக்கள் பணத்துக்கான காவலர்கள், எம்.எல்.ஏ.க்கள். பொதுமக்கள் பணத்தை அவர்கள் வீணடிக்கக் கூடாது. நிர்வாக முறைகளில் திறமையின்மை மற்றும் லஞ்சத்தை ஒழிப்பதற்கு அவர்களது கூட்டாக முயற்சி செய்ய வேண்டும்.
இது மிகப்பெரிய பணியாக இருந்தாலும், இந்த புதிய சட்டசபை திறமை, நேர்மை, மரியாதையுடனும், விவாதத்தின் போது சகிப்பு தன்மையுடனும் திகழ்ந்து, மேலும் புதிய பரிமாணங்களை எட்டுவது உறுதி. சாதாரண மனிதனின் கவலைகளை தீர்க்கும் அவையாக இது திகழ வேண்டும். தமிழக மக்களின் குரல், அவர்களின் பிரதிநிதிகளின் மூலம் இந்த புதிய வளாகத்தில் ஒலிக்கும் என்பது உறுதி. கடந்த கால சாதனைகளை எதிரொலிப்பதாகவும் இது அமையும்.
இங்குள்ள எம்.எல்.ஏ.க்களும், அரசு பணியாளர்களும் பெரிதாக சிந்தித்து, குறுகிய மனப்பான்மையை களைந்து தேச முன்னேற்றத்துக்கு வழிகாடுவார்கள் என்று நம்புகிறேன். புதிய இந்தியாவை வழிநடத்துவதற்கு தமிழர்கள் முன் உதாரணமாக இந்த இடத்தில் திகழ்வார்கள் என்பது உறுதி" என்றார் மன்மோகன் சிங்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications