கொடைக்கானல் தொழிலதிபரை கொல்ல சதி: கூலிப்படையுடன் சினிமா உதவி இயக்குனர் கைது
திருச்சி: கொடைக்கானல் தொழிலதிபரை கொல்ல சதித் திட்டம் தீட்டிய, ரவுடி முட்டை ரவியின் கூட்டாளியான சினிமா உதவி இயக்குனர் உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி பாலக்கரை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்த போது, அதில் இருந்த ஆறு பேர், முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் , மேலும் விசாரணை நடத்திய போது, அதில், திருச்சி மதன்குமார் (28), ஜோதி ராஜா(28), தஞ்சை தட்சிணாமூர்த்தி (25), மணிகண்டன்(29), அரவிந்தன்(34), கார் டிரைவர் தினகர் என்பதும் தெரிய வந்ததது.
இவர்கள் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி முட்டை ரவியின் கூட்டாளிகள் என்றும் தெரிய வந்தது.
மேலும், இவர்கள் கொடைக்கானல் தொழிலதிபர் மணிவேல் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், திண்டுக்கலைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சினிமா உதவி இயக்குனராக உள்ளார்.
திண்டுக்கலைச் சேர்ந்த வினோத் என்பவர் இயக்கும், "பாரதிபுரம்' என்ற படத்தில் பணியாற்றினார். இவர் வக்கீல் சுதாகர் கொலை வழக்கில் தொடர்புடையராவார்.
இந்த சதித்திட்டத்தில் மூளையாகச் செயல்பட்டது, மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ரவுடி குணா. அவனையும், தஞ்சையை சேர்ந்த பெரிய தட்சிணா (எ) தட்சிணாமூர்த்தியையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications