இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

ஒரிஸ்ஸா மாநிலம் பாலசூர் அருகே உள்ள வீலர்ஸ் தீவில் உள்ள இந்திய ராணுவ ஆராய்ச்சி மையத்தில் இன்று இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனையின்போது முதலில் பிருத்வி ரக ஏவுகணை 10.02 மணிக்கு ஏவப்பட்டது. இந்த ஏவுகணை வங்கக கடலின் மீது பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் இதை வானிலேயே தடுத்து அழிக்கும் interceptor ஏவுகணையை செலுத்த முயற்சிக்கப்பட்டது.
ஆனால், இந்த ஏவுகணை ஏவு வாகனத்தில் இருந்து கிளம்பவே இல்லை. அந்த ஏவுகணை டேக்-ஆபே ஆகவில்லை. இதனால் இந்த ஏவுகணை சோதனை தோல்வியைத் தழுவியது.
இது குறித்து ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கூறுகையி்ல், பிருத்வி ஏவுகணை தனது பாதையில் இருந்து விலகிச் சென்று கடலில் விழுந்துவிட்டது. இதனால் தான் இந்த ஏவுகணையை எதிர்கொண்டு அழிக்க, எதிர்ப்பு ஏவுகணைக்கு உரிய கமாண்ட் கிடைக்கவில்லை. இதனால் தான் அந்த ஏவுகணை டேக் ஆப் ஆகவில்லை என்றனர்.
15 முதல் 20 கி.மீ. தூரத்தில் வைத்து பிருத்வி ஏவுகணையை இந்த எதிர்ப்பு ஏவுகணை தாக்கி அழிக்கும் வகையில் சோதனை திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த சோதனையை நேற்றே நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறுகளால் சோதனை ஒத்தி வைக்கப்பட்டு இன்று நடத்தப்பட்டது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications