லோக்சபாவில் ஏப்ரலில் தான் மகளிர் மசோதா தாக்கல்-மொய்லி!
சிக்பல்லாபூர் (கர்நாடகா): லோக்சபாவில் மகளி்ர் இட ஒதுக்கீடு மசோதா ஏப்ரல் 12ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் கூடும்போது தாக்கல் செய்யப்படும் என்று சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.
இதுகுறித்து கர்நாடக மாநிலம் சிக்கபெல்லாபூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் மசோதா எதிர்பார்க்கப்பட்டபடி மார்ச் 15 அல்லது 16ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட மாட்டாது.
முதலில் நிதி மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரமாக உள்ளது. அதேபோல அணு சக்தி மசோதாவையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதன் பின்னர்தான் மகளிர் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும் என்றார் மொய்லி.
ராஜ்யசபாவில் கடும் எதிர்ப்பு கிளப்பிய சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகியவற்றை, லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யும்போது அலட்சியப்படுத்த விரும்பவில்லை காங்கிரஸ். மேலும், பாஜகவிலும் தற்போது மகளிர் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந் நிலையில் ரிஸ்க் எடுக்காமல், அனைத்துத் தரப்பினரையும் ஓரணியில் திரட்ட அவகாசம் எடுத்துக் கொள்ள அரசு விரும்புகிறது.
தற்போது எதிர்ப்பாக உள்ள அனைத்துத் தலைவர்களுடனும் விரைவில் பிரணாப் முகர்ஜி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தவுள்ளார் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications