ராஜபாளையம் அருகே மான் வேட்டையாடிய இருவர் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் மான் வேட்டையாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அரசன் என்ற அருமைக்கொடி(26). இவரது நண்பர் சுந்தரராஜபுரம் பாலுமகேந்திரா(22).
இவர்கள் இருவரும் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் அழிசோடை புளுகாண்டி கோயில் பகுதி அருகில் உள்ள இடத்தில் மான்களை வேட்டையாடி உள்ளனர்.
பின்பு, மான் கறியை பலருக்கும் விற்பனை செய்ய தங்களது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, தென்காசி ரோட்டில் ரமேஷ் எஸ்ஐ தலைமையிலான போலீசார், அவர்களை மடக்கி விசாரித்தனர்.
அப்போது அவர்களிடம் ஒரு கிலோ மான் கறியும், இரண்டு கிலோ கொழுப்பும், ரூ.1,000 ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்பு, இருவரையும் ராஜபாளையம் வன அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
வன அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மான் தோல், கத்தி, அரிவாள் போன்றவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைதல், வேட்டையாடுதல், கறியை விற்பனை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் இருவர் மீதும் வனத்தறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications