பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்-இலங்கை புதுக் கதை!

ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் போர் முடிந்து விட்டது, புலிகள் இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பது வரை இலங்கை அரசு கூறி வரும் தகவல்கள் நம்பும்படியாக உள்ளது. அதேசமயம், பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் குறித்து பெரும் குழப்பமே இதுவரை நீடித்து வருகிறது.
பிரபாகரன் என்று ஒரு உடலைக் காட்டியது இலங்கை. பின்னர் அவரது உடலை எரித்து சாம்பலை கடலில் வீசி விட்டோம் என்று அப்போதைய ராணுவத் தளபதி பொன்சேகா கூறினார்.
இதையடுத்து இந்தியாவின் சிபிஐ இலங்கை அரசை அணுகி, பிரபாகரன், பொட்டு அம்மான் மரணத்தை உறுதிப்படுத்தும் மரணச் சான்றிதழைத் தருமாறு கேட்டது. ஆனால் இதுவரை அதைக் கொடுக்கவே இல்லை இலங்கை அரசு.
மேலும், பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்பதையும் அது இதுவரை உறுதிப்படுத்த முடியாமல் இருந்து வருகிறது.
முதலில் அவர் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்கள். பின்னர் உடல் கிடைக்கவில்லை என்றனர். பிறகு உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று குழப்பினார்கள். இப்படியாக பொட்டு அம்மான் விஷயத்திலும் குழப்பமே நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது.
பொட்டு அம்மான் இறந்து விட்டார். அவரும், அவரது மனைவியும், போரின் இறுதி நாட்களின்போது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதனால்தான் அவர்களது உடலை இதுவரை மீட்க முடியவில்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
ஆனால் இன்டர்போல் தொடர்ந்து பொட்டு அம்மானைத் தேடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, பொட்டு உயிருடன் இருப்பதாக இந்தியாவின் ரா அமைப்பும் திடமாக நம்புகிறதாம். இரு அமைப்புகளுமே பொட்டு அம்மானைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகின்றனவாம்.
இதனால் இலங்கையின் நிலைமை இடியாப்பச் சிக்கலாக மாறியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications