தமிழக புதிய சட்டசபையில் நாளை பட்ஜெட் 2010-11 தாக்கல்

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய சட்டசபைக்கு தமிழக அரசு விடை கொடுத்து விட்டது. இதையடுத்து நாளை புதிய சட்டசபையில் 'குடித்தனத்தைத்' தொடங்குகிறார்கள்.
சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் புதிய சட்டசபைக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். இதையடுத்து நாளை முதல் இந்த சட்டசபை செயல்பாட்டுக்கு வருகிறது.
நாளை 2010-11ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கலுக்கு சட்டசபையை தயார்படுத்தும் வகையில், பழைய சட்டசபைக் கட்டிடத்தில் இருந்து பொருட்கள் அனைத்தும் புதிய சட்டமன்றத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டு உள்ளன. முதல்வர் கருணாநிதியின் கட்டளைக்கேற்ப இதற்கான பணிகள் இரவும் பகலும் நடக்கின்றன.
புதிய சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் நடப்பதற்கு ஏற்ப முதல்வர், சபாநாயகர், துணை முதல்வர், அமைச்சர்கள் உட்கார்வதற்காகவும், எம்.எல்.ஏ.க்கள் அமர்வதற்காகவும் இருக்கைகள் அமைக்கும் பணிகள், ஒலிபெருக்கிகள் பொருத்துவது, மின்சார இணைப்புகள் என்று அனைத்து பணிகளும் மின்னல் வேகத்தில் முடுக்கிவிடப்பட்டு, பட்ஜெட் கூட்டம் நடப்பதற்கு தயார் நிலையில் உள்ளன.
நிதி அமைச்சர் க.அன்பழகன் புதிய சட்டமன்றத்தில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அன்றைய தினம் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி சபையின் அடுத்த பணிகள் பற்றி முடிவு செய்யும்.
சட்டசபை புதிய கட்டடத்திற்கு மாறினாலும் எதிர்க்கட்சிகளின் பழைய கோஷங்கள் மாறாமல் தொடர்ந்து அதே காரசார விவாதங்களும் கலாட்டாக்களும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி வரலாம்...?
புதிய சட்டசபைக்குள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் எந்த வழியாக வருவது என்பது பற்றி அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர், அமைச்சர்கள், துணை சபாநாயகர், எதிர் கட்சி தலைவர், அரசு கொறடா, பொதுப்பணித்துறையால் வாகன அனுமதி சீட்டுடன் வரும் துணைச்செயலாளர் மற்றும் அதற்கும் மேல்நிலை அதிகாரிகள் அண்ணாசாலையில் பெரியார் சிலை முன்பு உள்ள வாயில் வழியாக வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள வாயில் வழியாகவும், செய்தியாளர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் அனைவரும் வாலாஜா சாலையில் உள்ள வாயில் வழியாகவும் சட்டப்பேரவை வளாகத்தினுள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications