மும்பை: மாஜி சுங்க அதிகாரி துப்பாக்கி சூடு-சிறுமி பலி
மும்பை: மனநலம் குன்றிய, ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி கண்மூடித்தனமாக சுட்டதில் 16 வயது சிறுமி பரிதாபமாக பலியானார்.
மும்பை அந்தேரி பகுதியில் சௌஜன்யா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி ஹரிஷ் மரோடியா.
65 வயதான இவருக்கும் அடுக்குமாடியில் அருகில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தினருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
சமீப காலமாக மன நலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து வருதாக கூறப்படும் ஹரிஷ், அருகில் குடியிருப்பவர்களுடன் சொத்து தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலையும் வழக்கம் போல வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். சுமார் பனிரெண்டு மணி வரை தகராறு நீண்டுள்ளது.
அப்போது அந்த வழியே 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
மனம் தன் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் காணப்பட்ட ஹரிஷ், யாரும் எதிர்பாராத வகையில் அந்த சிறுமியை திடீரென பிடித்து தூக்கிச் சென்று தன் குடியிருப்புக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டார்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு போலீசார் வந்து ஹரிஷிடம் கதவை திறக்குமாறு கூறினார்.
ஆனால் ஹரிஷ் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கிவிட்டார்.
போலீசாரும் பதிலுக்கு சுட்டனர்.
சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் போலீசார் உள்ளோ சென்று பார்த்த போது ஹரிஷுடன், அந்த சிறுமியை துப்பாக்கியால் சுடப்பட்டு தரையில் விழுந்து கிடந்தார்.
உடனடி ஹரிஷ் மற்றும் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications