அடுத்த 5 ஆண்டுகளில் 100 மில்லியன் மக்களுக்கு பிராட்பேண்ட்!
டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் 100 மில்லியன் மக்கள் இன்டர்நெட் பிராட்பேன்ட் உபயோகிப்பாளர்களாக மாறியிருப்பார்கள் என பிரதமரின் தொழில்நுட்ப கட்டமைப்பு ஆலோசகர் சாம் பிட்ரோடா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தொலைத் தொடர்பு புரட்சி ஏற்படக் காரணமானவர் என்று சாம் பிட்ரோடாவை குறிப்பிடுகின்றனர்.
வரும் ஆண்டுகளில் தொடலைத் தொடர்புத் துறையில் ஏற்படவுள்ள மாறுதல்கள் குறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் மக்கள் தொகை 1.2 பில்லியன். இவர்களில் 10 மில்லியன் பேருக்கு மட்டுமே பிராட்பேன்ட் வசதி உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 மில்லியன் மக்களுக்கு பிராட்பேன்ட் வசதி அளிக்கப்பட்டுவிடும் என நம்புகிறேன்.
இன்டர்நெட், தொலைபேசி மற்றும் ஐடி துறைகளை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம்தான் வரும் ஆண்டுகளில் கல்வி மற்றும் ஆரோக்கியத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும்" என்றார் சாம் பிட்ரோடா.
நாட்டின் அனைத்து பல்கலைக் கழகங்களையும் இணைக்கும் தேசிய அறிவுசார் நெட்வொர்க்கை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும், இதில் 10 ஜிபி திறனுடன் கூடிய பிராட்பேன்ட் இணைப்பு பயன்படுத்தப்படும் என்றும் பிட்ரோடா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications