காஷ்மீரில் இருந்து 35,000 துணை ராணுவப்படையினர் வாபஸ் - உமர் அப்துல்லா தகவல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த 15 மாதங்களில் 35 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்கள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
எல்லை தாண்டிய ஊடுருவல்காரர்கள், தீவிரவாதிகள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு என பல்வேறு அச்சுறுத்தல்களை சமாளிக்கும் நடவடிக்கை என்ற பேரில் காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் முகாமிட்டுள்ள துணை ராணுவப்படைகளின் அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மாநிலத்தில் பாதுகாப்பு நிலவரங்களை அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் கணிசமான எண்ணிக்கையில் படையினரை வாபஸ் பெறவேண்டும் என முதல்வர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், காஷ்மீரில் கடந்த 15 மாதங்களில் துணை ராணுவப் படை வீரர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுப்படை வீரர்கள் காஷ்மீரில் இருந்து கடந்த 15 மாத காலத்தில் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியானா பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படைவீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது தீவிரவாதிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என பாஜக எம்எல்ஏ சமண்லால் குப்தா சட்டசபையில் தெரிவித்தார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications