சாலையில் கவிழ்ந்து பீர் லாரி விபத்து- கொட்டிய பீரை அள்ளிக் குடித்த 'குடி' மக்கள்
சென்னை: சென்னையிலிருந்து விருதுநகருக்கு பீர் பாட்டில்களுடன் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து விழுந்தது. இதில் பீர் பாட்டில்கள் உடைந்து பீர் சாலையில் ஆறாக ஓடியது. இதைப் பார்த்த 'குடி'மக்கள் ஓடி வந்து அதை அள்ளிக் குடித்து ஆனந்தமடைந்தனர்.
சென்னையில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி விருதுநகருக்கு புறப்பட்டது. லாரியை தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மாடசாமி (40) என்பவர் ஓட்டிவந்தார்.
அந்த லாரி இன்று காலை 7 மணியளவில் திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியம் என்ற இடத்தில் வந்த போது பின்பக்க ஆக்சில் முறிந்து விபத்துக்குள்ளானது.
நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த பீர்பாட்டில்கள் அனைத்தும் உடைந்து ரோட்டில் ஆறாக ஓடியது. இதனை அவ்வழியே சென்ற குடிமகன்கள் பார்த்து உடையாத பீர் பாட்டில்களை பெட்டி பெட்டியாக அள்ளிச் சென்றனர்.
பலர் கொட்டி பீரை அப்படியே அள்ளிக் குடித்தும் ஆனந்தமடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து பாட்டில்களை பெட்டி பெட்டியாக அள்ளிக் கொண்டு போனவர்களை தடுத்து நிறுத்தி பாட்டில் பெட்டிகளை கைப்பற்றினர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்!












Click it and Unblock the Notifications