ஹைத்தியில் மீண்டும் நிலநடுக்கம் - 3 பேர் சாவு
போர்டாபிரின்ஸ்: ஹைத்தியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலியானார்கள்.
ஹைத்தியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கடும் பூகம்பம், சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டது.
வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என ஏராளமானவை இடிந்து விழுந்து மிகப் பெரிய பேரழிவை ஹைத்தி சந்தித்தது.
சர்வதேச நாடுகள் ஹைத்தி பூகம்ப நிவாரணப் பணிகளுக்கு உதவிகள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ஹைதி தீவில் நேற்று முன்தினம் இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.7 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. அப்போது பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பின்னர் மீண்டும் நேற்றிரவு ஹைதி தீவின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் சில வினாடிகள் தொடர்ந்து நீடித்தது.
இதில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கின. பலர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை ஐநா மீட்புக்குழு ஹைதியில் முகாமிட்டு மீட்புப் பணியை தீவிரப்படுத்தியது.
ஒரு கட்டிடத்தை அகற்றிய போது, அதற்குள் 3 பேர் உடல் நசுங்கி இறந்து கிடப்பது தெரியவந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications