சென்னை, மதுரை போக்குவரத்து கழகங்கள் 2ஆக பிரிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 7 கழகங்களாக தற்போது செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் என இயங்கி வருகின்றன.
சென்னையில் மட்டும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தினசரி சுமார் 30 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். மாநகர எல்லை நாளுக்கு நாள் விரிவடைவதால் பயணிகளின் எண்ணிக்கையும், பேருந்துகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.
எனவே நிர்வாக நடைமுறை பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சென்னை போக்குவரத்துக் கழகத்தை இரண்டாகப் பிரித்து நிர்வகிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, தற்போதுள்ள சென்னை மாநகர போக்குவரித்துக் கழகம் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களாக பிரிக்கப்படும்.
அதேபோல் மதுரை போக்குவரத்தை கழகத்தை 2 ஆகப் பிரித்து புதிதாக திருநெல்வேலி போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்படுகிறது.
மதுரை போக்குவரத்து கழகத்தில் தற்போது மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய டிவிஷன்கள் உள்ளன.
மதுரையில் இருந்து நாகர்கோவில் வரை நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படுவதால் திருநெல்வேலியை மையமாக வைத்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி டிவிஷன்கள் இணைந்து செயல்படும்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications