காங். ஆட்சி-ஸ்டாலின் முன்னிலையில் ஈவிகேஎஸ் பேச்சு!
சென்னை: காங்கிரஸ் கட்சி 1967ல் விட்ட ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே குமரி அனந்தன் தனது 77 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஆசையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் 77வது பிறந்த தினவிழா, சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு மணிமண்டபம் கட்ட, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் விழா, குமரி அனந்தன் எழுதிய 18 புத்தகங்கள் வெளியீட்டு விழா என, முப்பெரும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது.
விழாவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின், விழாவில் கலந்து கொண்டு குமரி அனந்தன் நூல்களை வெளியிட்டார்.
முக ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் இந்த விழாவில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் கூறுகையில், "பொதுவாக 25, 55, 65, 75வது பிறந்த நாளை கொண்டாடுவதுண்டு. குமரி அனந்தன் 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறாரே என, யோசித்தேன்.
அதாவது 67ல் விட்ட காங்கிரஸ் ஆட்சியை 77ல் பிடித்து விட வேண்டும் என நினைத்து தான் இந்த விழாவை கொண்டாடுகிறார் போலும்.
காமராஜர் காலத்தில் திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, குமரி அனந்தன் போன்றவர்கள் அதில் இடம் பெற்றிருந்தனர்.
ராகுல் தமிழகத்தில் விஜயம் செய்த பின், பெரும்பாலான இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைகின்றனர்.
மொழியை மட்டும் பிடித்துக் கொள்ளக்கூடாது!
மொழி மீது யாருக்கும் வெறி இருக்கக் கூடாது. ஆங்கிலத்தில் பேசினால் அதுவும் ஒரு ஓசை. காபி என்பதை கொட்டை வடிநீர் என்று மொழி பெயர்ப்பது தேவையற்றது. அதற்காக நான் தமிழ் மொழி மீது பற்று இல்லாதவன் அல்ல. மொழியை மட்டும் பிடித்துக் கொண்டு பேசக் கூடாது.
இளைய சமுதாயம் அடுத்த தலைமுறையில் முன்னேறுவதை பற்றி சிந்திக்க வேண்டும்..." என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications