விலைவாசி உயர்வுக்கு காரணம் பதுக்கல் - கடத்தல்தான்! - ஜெ

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து நான் வெளியிட்ட அறிக்கையில் 2009-2010ஆம் ஆண்டு ரூ.1,024.34 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2010-2011ல் ரூ.3,396.45 கோடியாக அதிகரித்து விட்டது என சுட்டிக்காட்டி இருந்தேன்.
பற்றாக்குறை அதிகரிக்கவில்லை. குறைந்து விட்டது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காக 2009- 2010ஆம் ஆண்டு திட்ட மதிப்பீட்டின்படி ரூ.1,024 கோடியாக இருந்த பற்றாக்குறை திருத்திய மதிப்பீட்டின் படி ரூ.5,020 கோடியாக அதிகரித்து விட்டதாகவும், இந்த திருத்திய மதிப்பீட்டை ஒப்பிடும் போது 2010-2011ம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீட்டின் படி, வருவாய்ப்பற்றாக்குறை ரூ.3,396.45 கோடியாக குறைந்து விட்டது என்று கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
திட்ட மதிப்பீட்டில் உள்ளதை விட திருத்திய மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை குறைந்திருந்தால் அதை தன்னுடைய அரசின் சாதனையாக கருணாநிதி சொல்வதில் தவறில்லை. திட்ட மதிப்பீட்டை விட திருத்திய மதிப்பீட்டில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அளவுக்கு வருவாய்ப்பற்றாக்குறை உயர்ந்திருப்பதை நடப்பாண்டு திட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிட்டு வருவாய் பற்றாக்குறை குறைந்து இருக்கிறது என்று கூறியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
2009-2010ஆம் ஆண்டு திட்ட மதிப்பீட்டில் ரூ.1,024 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை திருத்திய மதிப்பீட்டில் ரூ.5,020 கோடி அளவுக்கு, கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது போல், 2010-2011ஆம் ஆண்டு திட்ட மதிப்பீட்டில் ரூ.3,396 கோடி என்று உள்ள வருவாய்ப்பற்றாக்குறை திருத்திய மதிப்பீட்டில் ரூ.15,000 கோடி அளவுக்கு உயரும் என்பதை சூசகமாக தெரியப்படுத்தி இருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
மொத்தத்தில் 31-3-2006 அன்று ரூ.56,094 கோடியாக இருந்த மாநில அரசு பொறுப்புகளின் அம்சங்கள் 2010-2011 வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டின் படி 1,00,876.85 ஆக உயர்ந்துள்ளது. திருத்திய மதிப்பீட்டின் படி மேலும் எவ்வளவு உயரும் என்பதற்கு கருணாநிதிதான் பதில் சொல்ல வேண்டும்.
விலைவாசி உயர்வை அதிகரிக்கக் கூடிய நிதிநிலை அறிக்கையாக இருக்கிறதே என்ற கேள்விக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதியோர் ஓய்வூதியத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது. சத்துணவுத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, திருமண உதவித்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
கேலிக்கூத்து....
இலவச வேட்டி-சேலைகள் வழங்கும் திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது போன்றவை எல்லாம் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் செய்யப்படுகின்ற செயல்கள் தான் என்று கருணாநிதி கூறி இருக்கிறார். இந்த திட்டங்கள் எல்லாம் எனது ஆட்சிக்காலத்திலும் செயல்படுத்தப்பட்டன. இதற்கும் விலைவாசி உயர்வுக்கும் என்ன சம்பந்தம்?
நியாய விலை கடைகளின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களான அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் எல்லாம் தி.மு.க. வினரால் கடத்தப்படுவதையும், பதுக்கப்படுவதையும் மறைத்து, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம், அத்தியாவசியப் பொருள்களை மானிய விலையில் வழங்கும் திட்டம். ரூ.50க்கு மலிவு விலையில் 10 மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்டம் ஆகியவை எல்லாம் விலைவாசி உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று கருணாநிதி கூறியிருப்பது கேலிக் கூத்தாக இருக்கிறது.
கடந்த 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் வரலாறு காணாத அளவுக்கு உணவுப்பொருட்களின் விலைகள் விஷம் போல் ஏறிக்கொண்டே இருப்பதற்கு காரணம் கடத்தல், பதுக்கல் தொழில்களை அரசு ஊக்குவிப்பதுதான் என்பதை அறிவார்ந்த மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள்.
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, வேலையில்லாத் திண்டாட்டம், தொழில் உற்பத்தி, வேளாண் உற்பத்தி, நதி நீர்ப்பங்கீடு போன்ற மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு தமிழக மக்களின் சார்பில் முதல்வர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்..." என்று அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications